ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2024 (10:39 IST)

இந்தியா முழுவதும் பள்ளிகள் அருகே புகையிலை விற்பனை செய்ய தடை: மதுரை ஐகோர்ட் உத்தரவு..!

இந்தியா முழுவதும் பள்ளிகள் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பள்ளி, கல்லூரிகள் அருகே விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, தமிழகத்தில் பெரும்பான்மையான பள்ளிகளில் போதைப்பொருள் மாணவர்கள் பயன்படுத்துவது தெரியவந்துள்ளதாகவும், இதை தடை செய்யப்பட்ட பொருள் என அறிவித்து இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 புகையிலைப் பொருட்களை தடை செய்வது குறித்து மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும், முதல் கட்டமாக நாடு முழுவதும் பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Edited by Mahendran