1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (16:56 IST)

4வது டெஸ்ட் டிரா.. பார்டர்-கவாஸ்கர் கோப்பையை 4வது முறையாக வென்றது இந்தியா..!

அகமதாபாத்தில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததை அடுத்து பார்டர் கவாஸ்கர் கோப்பையை நான்காவது முறையாக இந்தியா வென்று உள்ளது என்பது குறிப்பிடப்பட்டது. 
 
பார்டர்-கவாஸ்கர்  கோப்பை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் ஏற்கனவே முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வென்றது. 
 
இதனை அடுத்து நான்காவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்த நிலையில் இந்த போட்டி டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 480 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்களும் எடுத்திருந்தன
 
இந்தியா தனது முதல் இன்னிசை 571 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் இந்த போட்டி டிராவில் முடிந்ததால் இந்தியா 2-1 என்ற கணக்கில் பார்டர்-கவாஸ்கர்   கோப்பையை வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஏற்கனவே மூன்று முறை இந்த கோப்பையை வென்று உள்ள நிலையில் இந்தியா தொடர்ச்சியாக நான்காவது முறையும் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றி அசத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran