வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 13 மார்ச் 2023 (15:36 IST)

பெருமைமிகு இந்தியர்களுக்கு என் சல்யூட்… ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு ரஜினி வாழ்த்து!

95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த  இந்தியாவை சேர்ந்த படைப்புகளுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதைப் பெற்றது. மேலும் தமிழ்நாட்டின் முதுமலை யானைகள் காப்பகம் மற்றும் ஆதரவற்ற யானைகளை வளர்க்கும் தம்பதிகள் பற்றி உருவாக்கப்பட்ட தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறும்படத்துக்கு சிறந்த குறும்படப் பிரிவில் விருது வென்றுள்ளது. இதையடுத்து இன்றைய நாள் இந்திய சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு நாளாக அமைந்து விருது வென்றவர்களுக்கு வாழ்த்து மழைப் பொழிந்து வருகின்றனர்.

இதுபற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “ஆஸ்கர் விருதுபெரும் கீரவாணி, ராஜமௌலி மற்றும் கார்த்திகி கோன்சால்வேஸ் ஆகியோருக்கு என் வாழ்த்துகள். பெருமைமிகு இந்தியர்களுக்கு என் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.