1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 12 செப்டம்பர் 2018 (18:29 IST)

மோசமான தோல்வியை சந்தித்தாலும் இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

இந்தியா அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தாலும் சர்வதேச டெஸ்ட் அணிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. இதனால் இந்திய அணி கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
 
இங்கிலாந்து புறப்படும் முன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரசி சாஸ்திரி கொஞ்சம் பில்டப் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் தொடரை இழந்ததன் மூலம் இந்திய அணி 10 புள்ளிகளை இழந்தது.
 
இதனால் 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 115 புள்ளிகளுடன் அதே முதலிடத்தில்தான் உள்ளது. இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் தொடரை வென்றது மூலம் தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 
 
இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் உள்ளன. இந்திய அணி மோசமான நிலையில் தொடரை இழந்தாலும் அதே முதலிடத்தில்தான் உள்ளது.