ராகுல், பேண்ட் அதிரடி சதங்கள்: வெற்றியை நெருங்கும் இந்தியா
லண்டனில் நடைபெற்று வரும் இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட் ஆனபோதிலும் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் மற்றும் பேண்ட் அதிரடியாக சதமடித்து விளையாடி வருகின்றனர்.
ராகுல் 216 பந்துகளில் 144 ரன்களும், பேண்ட் 127 பந்துகளில் 109 ரன்களும் எடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்திய அணி சற்றுமுன் வரை 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. எனவே இந்திய அணிக்கு வெற்றிக்கு இன்னும் 148 ரன்கள் மட்டுமே தேவை
இன்னும் 30 ஓவர்கள் மீதமிருக்கின்ற நிலையில் 148 ரன்கள் எடுக்க வாய்ப்பு இருப்பதால் இந்திய அணியின் வெற்றியும் பிரகாசமாக உள்ளதாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.