சீனாவின் அத்துமீறல்…மௌனம் காக்கும் இந்தியா!

China
Last Updated: புதன், 12 செப்டம்பர் 2018 (15:47 IST)
சமீப காலமாகவே நம் அண்டை நாடான சீனாவின் எல்லை அத்து மீறல்கள்
தொடர்ந்த வண்ணமாகவே உள்ளன. இதனால் இரு நாடுகளிடையே முட்டும் ,புகைச்சலுமாகவே இருந்து வந்தது
.அது தற்போது மேலும் விஷ்வரூபமெடுக்கும் வகையில் நம் நாட்டுக்குச் சொந்தமான அருணாச்சல பிரதேசத்தை சீனா தங்கள் நாடு என்று கூறிவரும் நிலையில் கடந்த மாதம் மட்டும் மூன்று முறை சீனப்படைகள் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. அதேசமயம் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள பரஹோட்டி என்ற கிராமத்துக்குள் சீனப்டைகள் அத்துமீறி நுழைந்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.


இது குறித்து கருத்து தெரிவித்த வடக்கு பிராந்திய ராணுவ தளபதி லெப்டினண்ட் :இரு நாடுகளிடையேயும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை அறிவதில் மாறுபட்ட கண்ணோட்டம் நிலவி வருவதாகவும் ,இதற்கு இரு நாடுகளும் பேச்சு வார்த்தைகள் நடத்தி அதன் மூலம் தீர்வு காண முயன்று வருவதாகவும் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :