1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 25 ஜூன் 2025 (07:27 IST)

5 சதங்கள் அடித்தும் தோல்வி.. இந்தியாவின் மோசமான உலக சாதனை..!

5 சதங்கள் அடித்தும் தோல்வி.. இந்தியாவின் மோசமான உலக சாதனை..!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், ஒரு டெஸ்ட் போட்டியில் ஐந்து சதங்கள் அடித்தும் தோல்வி அடைந்த அணி என்ற மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில்  ஆகிய மூவரும் சதம் அடித்தனர். இதனை தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் மீண்டும் சதம் அடித்தனர். இதில், ரிஷப் பண்ட் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், ஒரே போட்டியில் ஐந்து சதங்கள் அடித்தும் இந்திய அணி தோல்வியடைந்தது, 148 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக நடந்த ஒரு மோசமான சாதனையாக கருதப்படுகிறது. 
 
இதற்கு முன், 1928-29 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி விளையாடியபோது நான்கு சதங்கள் அடித்து தோல்வியடைந்ததுதான் இதுவரை மோசமான சாதனையாக இருந்தது. ஆனால், தற்போது 5 சதங்கள் அடித்தும் தோல்வி என்ற மோசமான வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது.
 
Edited by Siva