ஆசிய விளையாட்டு போட்டி.. இந்தியாவுக்கு 19வது தங்கம்
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 19வது தங்கம் கிடைத்துள்ளது. இன்று நடைபெற்ற வில்வித்தையில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றுள்ளது,
சீன தைபே அணியை 230க்கு 228 புள்ளி கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இதனால் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. இந்த பதக்கத்தையும் சேர்த்து நடப்பு ஆசிய போட்டிகளில் இந்தியாவிற்கு 82வது பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்றைய 11-வது நாளில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார்.
அதேபோல் இந்திய வீரரான கிஷோர் குமார் ஜெனா இதே பிரிவில் வெள்ளி வென்ற நிலையில் ஆடவருக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தங்கம் வென்றது.
இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 12 பதக்கங்களை பெற்ற நிலையில் இன்றும் தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இன்று பெற்ற தங்கத்தையும் சேர்த்து இந்தியா மொத்தம் 82 பதக்கங்களை பெற்றுள்ளது.
Edited by Mahendran