1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 25 ஆகஸ்ட் 2018 (20:50 IST)

இந்தியாவுக்கு 7வது தங்கம்: குண்டு எறிதல் போட்டியில் அசத்திய தஜிந்தர்சிங் தூர்

இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 6 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ள நிலையில் இன்று ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் 7வது தங்கம் கிடைத்துள்ளது.
 
இந்தியாவின் தஜிந்தர்சிங் முதல் முயற்சியிலேயே 20.75 மீ எறிந்து புதிய சாதனை படைத்து தங்கம் வென்றார். இவரை எடுத்து சீன வீரர் லியூ யங் வெள்ளி பதக்கத்தையும், இவான் இவனோவ் வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.
 
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 7 தங்கம், 5 வெள்ளி மற்றும் 17 வெண்கல பதக்கங்கள் பெற்று 8வது இடத்தில் உள்ளது ஆரம்பத்தில் இருந்தே பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.