வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (14:58 IST)

முரளி விஜய் வெளியே; 18 வயது கேப்டனுக்கு அழைப்பு விடுத்த இந்தியா

அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டன் ப்ரித்வி ஷா இடம்பெற்றுள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடு வருகிறது. டி20, ஒருநாள் தொடர்கள் முடிவடைந்து தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
 
இதில் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.  டெஸ்ட் தொடர் தொடங்கும் முன் முதல் மூன்று போட்டிக்கு மட்டுமே அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்து அறிவிக்கப்பட்டு இருந்தது.
 
இந்நிலையில் தற்போது அடுத்த இரண்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் இடம்பெற வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அடுத்த இரண்டு போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை.
 
தொடக்க வீரரான முரளி விஜய் மூன்று போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். குல்தீப் யாதவ் இந்தியா திரும்பிவிட்டார்.
 
இந்நிலையில் தொடக்க வீரராக களமிறங்க 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டன் ப்ரித்வி ஷா இடம்பெற்றுள்ளார்.