மே.இ.தீவுகளுக்கு எதிரான 3வது டி20 போட்டி.. இந்தியா அபார வெற்றி..!
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடந்த நிலையில் இதில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கண்ட தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 160 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா அணி சூரியகுமார் யாதவ் அபார பேட்டிங் காரணமாக வெற்றி பெற்றது. அவர் 44 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 83 ரன்கள் அடித்தார் என்பதும் திலக் வருமா 49 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva