வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2023 (07:29 IST)

விஜய்யின் 2 சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய சித்திக் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

விஜய் நடித்த பிரண்ட்ஸ் மற்றும் காவலன் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் சித்திக் காலமானார்.  
 
ப்ரண்ட்ஸ்,  காவலன் ஆகிய இரண்டு விஜய் படங்களையும் அதனை அடுத்து  எங்கள் அண்ணா, சாதுமிரண்டால், பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட தமிழ் படங்களையும் ஏராளமான மலையாள படங்களையும் இலக்கியவர் இயக்குனர் சித்திக் 
 
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு  உடல்நல குறைவு காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சையின் பலன் இன்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து தமிழ் மலையாள திரையுலகினர் சித்திக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
 இயக்குனர் சித்திக் சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் இரண்டு படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva