5-வது ஒருநாள் போட்டி : இந்திய அணி பேட்டிங்
தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகள் இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இன்று ஐந்தாவது ஒருநாள் போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, பவுலிங்கை தேர்வு செய்த்துள்ளது. இன்னும் சில நிமிடங்களில் இந்திய வீரர்கள்
பேட்டிங் செய்ய உள்ளனர்.
இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் 4-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றும்.