செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 31 ஜனவரி 2018 (06:15 IST)

அஸ்வினை விட சேப்பாக்கம் எனக்கு அத்துபிடி: ஹர்பஜன் டுவீட்

சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துக்கு சாதகமானது என்பதும், அந்த மைதானத்தில் சுழற்பந்துகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதும் தனக்கு அத்துபிடி என்றும், இந்த விஷயத்தில் அஸ்வின் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவரைவிட சிறப்பாக செயல்படுவேன் என்றும் ஹர்பஜன்சிங் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் ஹர்பஜன்சிங், தமிழ் கிரிக்கெட் ரசிகர்களை கவர அவ்வப்போது தமிழில் டுவீட் போட்டு வருகிறார். இருப்பினும் அஸ்வினை ஒப்பிட்டு, அவரை விட தான் அதிக திறமையானவர் என்று ஹர்பஜன் கூறியதை தமிழக ரசிகர்கள் ரசிக்கவில்லை என்பது ஹர்பஜனின் டுவீட்டுக்கு வந்த கமெண்டுகளில் இருந்து தெரியவருகிறது

மேலும் இந்த ஐபிஎல் போட்டியில் தனது திறமையை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹர்பஜன்சிங்கின் நம்பிக்கை நிஜமாக அவரை வாழ்த்துவோம்