புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 15 நவம்பர் 2017 (17:30 IST)

நான் ரோபோ இல்லை; எனக்கும் அது தேவைப்படும் - விராட் கோலி

நான் ஒன்றும் ரோபோ இல்லை வேண்டுமென்றால் என் சதையை அறுத்து பாருங்கள் ரத்தம் வரும், எனக்கும் ஓய்வு தேவைப்படுகிறது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.


 

 
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாளை ஈடன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. தான் ஒன்றும் ரொபோ இல்லை தனக்கு ஓய்வு தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
பணிச்சுமை பற்றி பேசுவதற்கு கடினமாக உள்ளது. வீரர்கள் ஓய்வெடுக்க வேண்டுமா இல்லையா என்பது பற்றி நிறைய பேச்சு உள்ளது. இப்போது 20-25 வீரர்கள் கொண்ட ஒரு வலுவான அணியை நாங்கள் கொண்டுள்ளோம். முக்கியமான வீரர்கள் முக்கிய நேரங்களில் இறக்கப்பட வேண்டும். அந்த சமநிலை பராமரிக்கப்பட வேண்டும்.
 
நிச்சயமாக எனக்கு ஓய்வு தேவை. என் உடல் ஓய்வெடுக்க வேண்டும் என நினைக்கும்போது, நான் அதை கேட்கிறேன். நான் ஒன்றும் ரோபோ இல்லை என்று கூறியுள்ளார்.
 
விராட் கோலி இந்த ஆண்டில் மட்டும் 7 டெஸ்ட், 26 ஒருநாள், 10 டி20 சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் 10வது சீசனில் 10 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.