வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2017 (12:39 IST)

சமூக வலைதள பதிவால் கோடியில் புரளும் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒவ்வொன்றுக்கும் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறாரம்.


 

 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து விராட் கோலி இந்திய அணிக்கு கேப்டனாக பெறுப்பேற்றுக்கொண்டார். இன்னும் சில ஆண்டுகளில், உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கும் கோலி சச்சினின் சாதனைகள் அனைத்தையும் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்திய அணி தொடர்ந்து வெற்றிப்பெற்று வரும் நிலையில் கோலியின் மார்க்கெட் எகிறுகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் ஒவ்வொரு விளம்பர பதிவுக்கும் ரூ.3.2 கோடி கிடைக்கிறதாம். இது பிரபல கால்பந்து வீரர் மெஸ்சி பெறுவதை விட அதிகமாகும்.
 
விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் பேரும், டுவிட்டரில் 20 மில்லியன் பேரும், ஃபேஸ்புக்கில் 36 பேரும் பின் தொடர்கிறார்கள்.