1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 2 நவம்பர் 2017 (16:05 IST)

போட்டியின்போது வாக்கி டாக்கியில் பேசிய கோலி; சர்ச்சையை ஏற்படுத்திய ஊடகங்கள்

நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வாக்கி டாக்கியில் பேசியது பெரிய சர்சையை ஏற்படுத்தியது.


 

 
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நேற்று முதலாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்த போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வாக்கி டாக்கியில் பேசிய காட்சிகள் நேரடி ஒளிபரப்பில் வெளியானது.
 
கிரிக்கெட் போட்டியின்போது தொலைத்தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தக்கூடாது என்ற விதிகள் இருக்கும் பட்சத்தில் அதை விராட் கோலி மீறியுள்ளதாக ஊடகங்களின் செய்திகள் வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இதையடுத்து இந்த ஐசிசி விளக்கம் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஐசிசி ஊழல் தடுப்பு ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்ற பிறகே கோலி வாக்கி டாக்கி பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிசி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
 
டக் அவுட்டில் உள்ள வீரர்களுடன் ஒய்வறையில் இருக்கும் உதவி பணியாளர்கள் பேசுவதற்காக ஐசிசி ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அனுமதி பெற்ற பிறகே விராட் கோலி வாக்கி டாக்கி பயன்படுத்தினார். மேலும், மொபைல் போன்கள்தான் போட்டியின் போது பேசக்கூடாது என்று விதிகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.