திங்கள், 25 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 15 நவம்பர் 2017 (13:17 IST)

கோலி தோனியை காப்பாற்ற தேவையில்லை; கபில்தேவ் அதிரடி

தோனியை யாரும் பாதுகாக்க தேவையில்லை, அவர் சரியில்லை என நினைக்கும்போது அவரே விலகி கொள்வார் என முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.


 

 
தோனி சீனியர் என்ற முறையில் இளம்வீரர்களுக்கு வழி விட வேண்டும் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்தை முன்வைத்து வருகின்றனர். விவிஎஸ் லக்‌ஷ்மண், அண்மையில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து தோனி சிறப்பாக செயல்பட்டு இருந்தால் இந்தியா வெற்றிப் பெற்றிருக்கும்.
 
ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடும் தோனி, டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. இதனால் அவர் டி20 போட்டியில் இருந்து விலகி கொள்ள வேண்டும். இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்று கூறினார். தோனி ஆட்டம் சிறப்பாக இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் கவாஸ்கர், கபில்தேவ் உள்ளிட்ட சில ஜாம்பவான்கள் தோனிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
மேலும் தோனி அணியில் தொடர்ந்து இடம்பிடிப்பதற்கு காரணம் கோலிதான் என்ற செய்தியும் பரவி வந்தது. போட்டியின்போது கோலி சற்று திணறும்போது தோனி அங்கு கேப்டனாக செயல்படுவது வழக்கமாக நடந்துக்கொண்டுதான் உள்ளது. 
 
இந்நிலையில் தற்போது தோனி குறித்த விமர்சனங்களுக்கு முன்னள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
தோனியை யாரும் காப்பாற்ற தேவையில்லை. அவரே தான் சரியாக செயல்பட முடியவில்லை என நினைக்கும்போது தானே விலகி கொள்வார் என கூறியுள்ளார்.