ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2017 (05:17 IST)

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ்: மார்ட்டினா ஹிங்கிஸ்-சான்யூங் ஜான் ஜோடி சாம்பியன்

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தற்போது நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று நடந்த மகளிர் இரட்டை பிரிவு இறுதி ஆட்டத்தில் மார்டினா ஹிங்கிஸ் - சான் யுங் ஜான் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.



 
 
சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் மற்றும் தைவானின் சான் யுங்-ஜான் ஜோடிக்கும், செக் குடியரசின் லூசி ரடேக்கா மற்றும் கட்ரினா சினியகோவா ஜோடிக்கும் நேற்று நடந்த விறுவிறுப்பான மகளிர் இரட்டையர் இறுதி போட்டியில்  6 - 3, 6 - 2 என்ற நேர் செட்டில் மார்டினா ஹிங்கிஸ் மற்றும் தைவானின் சான் யுங்-ஜான் ஜோடி வெற்றி பெற்றது.
 
அதேபோல் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்பெயின் நாட்டு வீரரான நடால் தனது சக நாட்டு வீரரான ஆண்டர்சனை 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் சாம்பியன் பட்டம் வென்றார்.