திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2017 (07:16 IST)

நடிகை ப்ரீத்தி ஜிந்தா கைப்பற்றிய இன்னொரு கிரிக்கெட் அணி!

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருக்கும் பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தற்போது மேலும் ஒரு அணியை மிகப்பெரிய தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளார்



 
 
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போலவே தென்னாப்பிரிக்காவில் குளோபல் லீக் கிரிக்கெட் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் ஸ்டெலன்போஸ்ச்  என்ற அணியை நடிகை ப்ரீத்திஜிந்தா விலைக்கு வாங்கியுள்ளார். இந்த அணியில் பாப் டு பிளிஸ்சிஸ், மலிங்கா, அலெக்ஸ் ஹாலஸ் உள்ளிடோர் இருக்கிறார்கள். பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் செயல்பட உள்ளார்.
 
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஹரூன் லார்கட் இதுகுறித்து கூறியபோது, '“குளோபல் லீக் கிரிக்கெட் குடும்பத்தில் பிரீத்தி ஜிந்தாவும் இணைந்திருப்பதை பெருமிதத்துடன் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.