புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 18 ஜனவரி 2022 (15:03 IST)

15 கோடி கொடுத்து ஹர்திக் பாண்ட்யாவை வாங்கிய புதிய ஐபிஎல் அணி

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கடந்த ஆண்டோடு ஹர்திக் பாண்ட்யா கழட்டிவிடப்பட்டார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் தூண்களில் ஒருவர் ஹர்திக் பாண்ட்யா. நெருக்கடியான கட்டத்தில் இறங்கி பல போட்டிகளில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெறவைத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு நடக்க உள்ள மெகா ஏலத்துக்காக அவரைக் கழட்டிவிட்டது மும்பை.

இதனால் அவர் இப்போது புதிய அணியான அகமதாபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவருக்காக 15 கோடி ரூபாயை ஒப்பந்த தொகையாக அந்த அணி அறிவித்துள்ளது. இவரைத் தவிர ரஷித் கானை 15 கோடி ரூபாய்க்கும், ஷுப்மன் கில்லை 7 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளதாம். மொத்த ஏலத்தொகையான 90 கோடியில் 37 கோடியை 3 வீரர்களுக்காக ஒதுக்கியுள்ளது.