வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 7 நவம்பர் 2021 (11:05 IST)

நியுசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு நாங்கள் தயார்… ரஷித் கான் உற்சாகம்!

நியுசிலாந்து vs ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை அந்த இரு நாட்டு ரசிகர்களை விட இந்திய ரசிகர்கள்தான் மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஸ்காட்லாந்து அணியை இந்தியா 7 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் உயர்ந்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு முன்னால் நாம் உள்ளோம். இந்நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. அது என்னவென்றால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடக்கும்  போட்டியில் ஆப்கான் அணி வெற்றி பெற வேண்டும். அதனால் இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வழி மேல் விழிவைத்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் ரஷித்கான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நியுசிலாந்து அணிக்கெதிரான மிகப்பெரிய போட்டிக்கு நாங்கள் தயார்’ எனக் கூறியுள்ளார்.