1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 26 ஏப்ரல் 2018 (10:26 IST)

மூச்சுவிட்ற சத்தமே இங்க உறுமல் தான்: சிஎஸ்கே வெற்றி குறித்து ஹர்பஜன்சிங்

கடந்த சில நாட்களாகவே சிஎஸ்கே அணியின் வீரர்களில் சிலர் தமிழில் டுவீட் போட்டு கலக்கி வருகின்றனர்,. குறிப்பாக ஹர்பஜன்சிங், சென்னை தமிழில் அவ்வபோது டுவீட் போட்டு சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
 
இந்த நிலையில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணியை அதன் சொந்த மண்ணில் சிஎஸ்கே அணி வீழ்த்தியது. இந்த அசத்தலான வெற்றி குறித்து ஹர்பஜன்சிங் தமிழில் போட்ட டுவீட்டில், 'வாடிவாசல் தெறந்தவங்க கிட்டயே வரிஞ்சுக்கற்றதா. யாரு திமில யாரு அடக்கப்பாக்குறது..! மூச்சுவிட்ற சத்தமே இங்க உறுமல் தான். @rcbtweets " நம் @chennaiipl    மனைஹே பண்ணி குரு!! பந்தே இல்ல நீவு எஸ்ட்டு தின ஆய்த்து  பேஹ பா மகா " நீ நொறுக்கு பங்கு என்று கூறியுள்ளார்.
 
74 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்கள் வீழ்ந்து தத்தளித்து கொண்டிருந்த சென்னை அணியை தனி ஆளாக தூக்கி நிறுத்தி 34 பந்துகளில் 70 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட தோனிக்கு வாழ்த்துக்கள் ஒருபுறம் குவிந்து கொண்டிருக்க, இன்னொரு புறம் ஹர்பஜன்சிங்கின் தமிழ் டுவீட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.