பெங்களூரு கோட்டையில் கோலியை எதிர்கொள்ளும் தோனி

d
Last Modified புதன், 25 ஏப்ரல் 2018 (11:24 IST)
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
 
11-வது ஐபிஎல் தொடரின் 24-வது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
 
இரு அணிகளுக்கும் இது ஆறாவது போட்டியாகும், சென்னை அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி, 4 போட்டிகளில் வென்று, 1 போட்டியில் தோற்றுள்ளது. ஆனால், பெங்களூரு அணி 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வென்று, 3 போட்டியில் தோற்றுள்ளது.
d
 
இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு அணி புள்ளிபட்டியளில் முன்னேற கட்டாயம் வெற்றி பெற முயற்சிக்கும். அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியளில் முதலிடம் பெற முயற்சிக்கும். எனவே இந்த போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


இதில் மேலும் படிக்கவும் :