ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 மே 2023 (19:11 IST)

முதல் குவாலிஃபையர் போட்டி: டாஸ் வென்ற குஜராத் எடுத்த அதிரடி முடிவு..!

சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குவாலிஃபயர் 1 போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டி இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளது. 
 
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய காலத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் இன்றைய போட்டியை வெல்ல  தீவிரமாக முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குஜராத் அணியில் யாஷ் தயால் என்பவருக்கு பதிலாக தர்ஷன் நல்கண்டா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
Edited by Mahendran