செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 7 டிசம்பர் 2022 (11:00 IST)

FIFA உலகக் கோப்பை 2022: யார் யாருடன் மோதுவார்கள்?

FIFA உலகக் கோப்பை 2022 காலிறுதிப் போட்டிகளின் வரிசை முடிவு செய்யப்பட்டுள்ளது.


உலகக்கோப்பை கால் பந்து போட்டியின் 16-வது சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகல் 6-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியதன் மூலம் போட்டியின் காலிறுதிப் போட்டிக்கான வரிசை முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் போன்ற முன்னணி அணிகள் ஏற்கனவே குரூப் கட்டத்தில் வெளியேற்றப்பட்டன.

16வது சுற்றில் 2010 சாம்பியன்களான ஸ்பெயின் பெனால்டியில் மொராக்கோவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல் மற்றும் இங்கிலாந்து போன்ற ஜாம்பவான்கள் உறுதியான முடிவுகளுடன் தங்கள் தகுதியை கடைசி 8க்குள் பதிவு செய்துள்ளனர். FIFA உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் 4 அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு செல்லும் என்ற நிலையில் சில பரபரப்பான போட்டிகள் பார்வையாளர்களுக்காக காத்திருக்கின்றன.

FIFA உலகக் கோப்பை 2022 காலிறுதிப் போட்டிகளின் முழு அட்டவணை:
டிசம்பர் 9, வெள்ளி (இரவு 8:30 மணி ): எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியத்தில் குரோஷியா vs பிரேசில்
டிசம்பர் 10, சனிக்கிழமை (காலை 12:30 மணி ): லுசைல் மைதானத்தில் நெதர்லாந்து vs அர்ஜென்டினா
டிசம்பர் 10, சனிக்கிழமை (இரவு 8:30 மணி ): அல் துமாமா மைதானத்தில் போர்ச்சுகல் vs மொராக்கோ
டிசம்பர் 11, ஞாயிறு (12:30 AM ): அல் பேட் மைதானத்தில் இங்கிலாந்து vs பிரான்ஸ்

இங்கிலாந்து vs பிரான்ஸ் மோதலானது கால் இறுதிப் போட்டியில் மிகவும் பரபரப்பான போட்டியாகும். அதே சமயம் அர்ஜென்டினா vs நெதர்லாந்து சண்டையும் கடுமையான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.