வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 3 டிசம்பர் 2022 (23:34 IST)

FIFA உலகக் கோப்பை : அமெரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி

football
கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடந்து வருகிறது. இத்தொடரில் நாக் அவுட் சுற்றில், அமெரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்றுகள் முடிந்து, இன்று நாக் அவுட் சுற்றுகள் ஆரம்பித்துள்ளது.

நாக் அவுட் சுற்றின் இன்றைய போட்டியில்,  நெதர்லாந்து அணியின் மெம்பிஸ் ஆட்டம் தொடங்கிய 10 வது நிமிடத்திலேயே முதல் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதையடுத்து, 46 வது நிமிடத்தில், பிளைண்ட் என்ற வீரர் 2 வது கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

இந்த நிலையில்   நெதர்லாந்துக்க்ப் பதிலடியாக அமெரிக்க வீரர் ஹாஜி 76 வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார்.

ஆனால், நெதர்லாந்து அணியின் டம்ப்ரஸ் 3 வது கோல் அடிக்கவே  நெதர்லாந்து 3-1 என்றகோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.

Edited by Sinoj