திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 3 டிசம்பர் 2022 (21:07 IST)

காமன்வெல்த்தில் தலா 4 தங்கம் வென்ற இரு தமிழக வீரர்கள்

common wealth
காமன்வெல்த்  பளுதூக்கும் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த 2 வீரர்கள் தலா 4 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
 

நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற  காமன்வெல்த் போட்டியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தினேஷ் சப் ஜூனியர் 66 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டார்.  இப்போட்டியில் இவர் 218 கிலோ எடையைத் தூக்கிச் சாதனை படைத்துள்ளார்.

அதேபோல், 200 கிலோ எடையைத் தூக்கி, தங்கம் வென்றார். பென்ச் பிரஸ்ஸில் 120 கிலோ எடையைத் துக்கி தங்கம் வென்றார். மேலும், 538 கிலோ எடையைத் தூக்கியதற்கியாக தங்கம் வென்று 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இப்போட்டியில், தமிழ் நாட்டைச் சேர்ந்த எஸ்.ஷேக் அப்துல்லா 59 கிலோ எடைப்பிரிவில் டெட் லிப்ட் கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார். ஸ்குவாட்டில் 210 கிலோ எடையைத் தூக்கித் தங்கம் வென்றார்ல் அதேபோல், பென்ச் பிரசில் 120 எடையைத் தூக்கி தங்கமும்,500 கிலோ எடையைத் தூக்கியதற்காக தங்கம் என மொத்தம் 4 தங்கப்பதக்கங்கள் வென்றார்.

இரு வீரர்களுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.