வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 3 டிசம்பர் 2022 (22:58 IST)

FIFA உலகக் கோப்பை : செர்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து வெற்றி

serbia - Switzerland
கத்தாரில்  நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றைய போட்டியில், செர்பியாவை வீழ்த்தி, சுவிட்சர்லாந்து வெற்றி பெற்றுள்ளது.

கத்தார் நாட்டில்  ஃபிஃபாவின் 22 வது கால்பந்து உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறது.

ஜீ பிரிவில் இடம்பெற்றுள்ள செர்பியா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையே  நடைபெற நேற்றைய நள்ளிரவு போட்டியில், சுவிட்சர்லாந்து வீரர் செர்டான்  20 வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார்.

அதன்பின், 26 வது  நிமிடத்தில்,செர்பியாவின் அலெக்சாண்டர் மிட்ரோவில் மற்றொரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

அடுத்து, 48 வது  நிமிடத்த்ல் ரெமோ 3 வது கோல் அடிக்கவே சுவிட்சர்லாந்தின் வெற்றி உறுதியானது.

செர்பியா அணி 2 கோல்கள் அடித்த போதிலும், சுவிட்சர்லாந்திடம் 3-2 என்ற கோல்கணக்கில் தோற்றது.

Edited by Sinoj