பெரும் எதிர்பார்ப்பில் ஃபிஃபா உலகக்கோப்பை! கத்தார் – ஈகுவடார் அணிகள் இன்று மோதல்!
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று தொடங்க உள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை காண உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த 2022ம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் இன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது.
டிசம்பர் 18ம் தேதி வரை 29 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 32 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றனர். கத்தாரில் உள்ள 5 நகரங்களில் 8 மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.
இன்று தொடக்க போட்டியிலேயே கத்தார் – ஈகுவடார் அணிகள் மோத உள்ளன. கத்தார் அணி இதுவரை உலக்கோப்பைக்கு தகுதி பெற்றது இல்லை. இந்த முறை கத்தாரில் போட்டிகள் நடைபெறுவதால் உலகக்கோப்பை போட்டிகளில் நுழைந்துள்ளது. ஆனால் ஈகுவடார் அணி ஏற்கனவே பிரபல அணியாக இருந்து வருகிறது.
இதனால் இந்த போட்டியில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த போட்டியை இந்திய நேரப்படி இரவும் 9.30 மணிக்கு ஸ்போர்ட்ஸ் 18 சேனல் மற்றும் ஜியோ சினிமா செயலியில் நேரடி ஒளிபரப்பாக காண முடியும்.
Edit By Prasanth.K