வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (17:16 IST)

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: பெண்கள் கவர்ச்சி ஆடைகள் அணியத் தடை!

இந்த 2022ம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் இந்த மாதம் 20ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகளை முழுவீச்சில் அந்த நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த உலகக் கோப்பை தொடர், மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. 

இந்த நிலையில், கத்தாரில்  பெண்கள் கவர்ச்சி ஆடைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து அந்த நாட்டிற்கு வரும் பெண்கள் கத்தாரின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு  நடக்க வேண்டும் எனவும்,  பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான ஆடைகள் அணியலாம் என்றும், பொது இடங்களுக்கு செல்லும்போது தோள்கள் மற்றும் முழங்காலை மறைத்து ஆடை அணிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும்,  இதை மீறி அங்கு பொதுவெளியில் கவர்ச்சி உடை, இறுக்கமான ஆடை அணிந்தால் சிறத்தண்டனை விதிக்கப்படுமம்  என்று தெரிவித்துள்ளது.

Edited by Sinoj