1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (20:39 IST)

67 ரன்களுக்குள் 4 விக்கெட்டுக்கள்: வெற்றியை நோக்கி இந்தியா!

67 ரன்களுக்குள் 4 விக்கெட்டுக்கள்: வெற்றியை நோக்கி இந்தியா!
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளதால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது 
 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடைபெற்றுவருகிறது. இன்றைய நாளில் 272 ரன்கள் என்ற இலக்கை இந்தியா கொடுத்த நிலையில் இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது
 
இங்கிலாந்து அணியின் நான்கு முக்கிய விக்கெட்டுகளான பர்ன்ஸ், சிப்லே, ஹமீது மற்றும் பெயர்ஸ்டோ ஆகிய நால்வரும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனையடுத்து கேப்டன் ரூட் மட்டும் தற்போது தோல்வியை தவிர்க்க போராடி வருகிறார்
 
இங்கிலாந்து அணி இன்னும் 205 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 6 விக்கெட்டுகளை மட்டுமே கைவசம் வைத்துள்ளதால் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்குமா? அல்லது போட்டியை இங்கிலாந்து டிரா செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்