1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (17:18 IST)

உலகக்கோப்பைக்காக திரும்பி வாருங்கள்: ஓய்வு பெற்ற பென் ஸ்டோக்ஸை அழைக்கும் இங்கிலாந்து..!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான பெண் ஸ்டோக்ஸ் சமீபத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் அவரை அணிக்கு திரும்ப வாருங்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது 
 
 இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் ஓய்வு பெற்ற பென்ஸ்டோக்ஸை  மீண்டும் அணிக்கு திரும்ப இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. 
 
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஓய்விலிருந்து திரும்ப வர வேண்டும் என்று  இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எடுத்த அழைப்பை பென்ஸ்டோக் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 
 
கடந்த ஆண்டு சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்ற நிலையில் மீண்டும் உலக கோப்பைக்காக திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran