சாஹலை பார்த்து தோனி ஓடியது ஏன் தெரியுமா...? இதோ ’இதுக்கு’ பயந்துதான்...?

dhoni
Last Modified திங்கள், 4 பிப்ரவரி 2019 (16:19 IST)
நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை இந்தியா சூப்பர் வெற்றி பெற்றுள்ளது. அடுத்து  வரவுள்ள உலக கோப்பை போட்டிக்கும்  இந்திய அணி வீரர்கள்  முழுஅளவில் தயாராகி வருவதாக எல்லோரும் கருதுகிறார்கள். 
ஆனால் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதும், பரிசளிப்பு விழா நடைபெற்றது.  அப்போது சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தோனியிடம் ஏதோ கேட்க அதற்கு தோனி மறுப்பு தெரிவிப்பதிபோல் அவ்விடத்திலிருந்து ஒடிச்சென்றார்.
 
இது ஏன் சாஹலிடமிருந்து  தோனி தப்பிச் செல்ல வேண்டும் என கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தனர்.
 
அதற்கான காரணம் என்னவென்றால்...இந்திய சுழற்பந்து வீச்சாளரான சாஹல் போட்டி முடிந்ததும் அணியினரிடம் இது குறித்து பேட்டு எடுத்து தன் மொபைல் கேமராவில் பதிவுசெய்து அதை வெளியிடுவார்.
 
இது மிகவும் பிரபலமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறது.அதேபோல் நேற்றைய ஆட்டத்தின் முடிவிலும் சாஹல் தோனியை தன் டிவியில் பேட்டி எடுக்க வேண்டும் தீர்மானித்து அவரிடம் சென்றார்.ஆனால் இது பற்றி அறிந்த தோனி சட்டென்று ஓடி விட்டார். இதுதான் தோனி ஓடியதற்கான காரணம் என்று தெரிகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :