ஐசிசி தரவரிசை – கோஹ்லி, குல்தீப் முதலிடம்… தோனி முன்னேற்றம் !

Last Modified திங்கள், 4 பிப்ரவரி 2019 (15:49 IST)
ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கோஹ்லி மற்றும் பூம்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்.

2019 ஆம் ஆண்டுக்கான ஜனவரி மாதத்திற்குரிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்திய அணி 122 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

இதில் ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில் விராட் கோஹ்லி 887 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ரோஹித் ஷர்மா 854 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். நியுசிலாந்தின் ராஸ் டெய்லர், இங்கிலாந்தின் ஜோய் ரூட், பாகிஸ்தானின் பாபர் ஆஸம், தெ. ஆப்பிரிக்க வீரர் டூப்பிளசிஸ், மே.இ.தீவுகள் வீரர் ஷாய் ஹோப், தெ.ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக், பாகிஸ்தானின் பக்கர் ஜமான் ஆகியோர் அதற்கடுத்த இடத்தில் உள்ளனர். இந்தியாவின் ஷிகார் தவான் 744 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி சமீபத்தைய சிறப்பான ஆட்டத்தால் மீண்டும் 17 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதேப் போல பவுலர்கள் வரிசையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 808 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ரஷித் கான்  2 ஆவது இடத்திலும் ட்ரண்ட் போல்ட் 3 ஆவது இடத்திலும் குல்தீப் 4-வது இடத்திலும் யஷ்வேந்திர சாஹல் 5-வது இடத்திலும் உள்ளனர். ஆனால் ஏமாற்றமளிக்கும் விதமாக ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் முதல் 10 இடத்தில் எந்த இந்தியரும் இல்லை.இதில் மேலும் படிக்கவும் :