செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 4 பிப்ரவரி 2019 (07:59 IST)

பிரதமர் மோடியால் இடமாற்றம் செய்யப்பட்ட டி-20 போட்டி

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதில் ஒருநாள் போட்டி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி வரும் 6ஆம் தேதி முதல் டி-20 போட்டி தொடரில் விளையாடவுள்ளது.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு டி-20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பிப்ரவரி 24ஆம் தேதி பெங்களூரில் 2வது டி-20 போட்டி விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதே நாளில்  பெங்களூருவில் நடைபெறும் விமானப்படை நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதால் இந்த போட்டி 24ம் தேதி பெங்களூருவில் நடப்பதற்கு பதிலாக 27ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.