புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (07:30 IST)

விம்பிள்டன் டென்னிஸ்: செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன்!

கடந்த சில வாரங்களாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருவதை பார்த்து வருகிறோம். இந்த போட்டியில் செர்பிய அணியின் ஜோகோவிச் மற்றும் இத்தாலி நாட்டின் பெர்ரெட்டினி ஆகிய இருவரும் மோதினர் 
 
நேற்று இரவு நடந்த இந்த போட்டியில் இரு வீரர்களும் சலைக்காமல் ஒருவருக்கொருவர் ஆவேசமாக விளையாடினார். இருப்பினும் இத்தாலி வீரர் பெர்ரெட்டினியை செர்பியாவின் ஜோகோவிச் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார் 
 
ஜோகோவிச் இத்தாலி வீரரை 6 - 7, 6 - 4, 6 - 3 என்ற செட் கணக்கில் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த ஆண்டு அவர் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் பிரெஞ்சு ஓபன் ஆகிய சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள நிலையில் தற்போது அவர் 3வதாக விம்பிள்டன் கோப்பையையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை பெற்றதை அடுத்து அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ரோஜர் பெடரர் மற்றும் நடால் ஆகியோர்களின் சாதனையை சமன் செய்துள்ளார் என்பதும் மூவரும் தலா 20 கிராம் பட்டங்களை வென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது