வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 26 மே 2018 (19:18 IST)

எனது தவறே தோல்விக்கு காரணம் - தினேஷ் கார்த்திக்

நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியின் தோல்விக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக் மிகவும் வருந்தியுள்ளார்.

 
ஐபிஎல் 2018 தொடரின் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்து இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால் நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோத உள்ளன.
 
இந்நிலையில் போட்டிக்கு பின் தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-
 
இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாக ஆடினோம். ரன் இலக்கை தொடங்கும் போது எங்கள் பக்கமே ஆட்டம் இருந்தது. ஆனால் சில மோசமான ஷாட்களும், ஒரு ரன் அவுட்டும் எங்களிடம் இருந்து போட்டிடை மாற்றிவிட்டது.
 
நான், உத்தப்பா ஆகியோர் நன்றாக ஆடி ஆட்டத்தை சிறப்பாக முடித்திருக்க வேண்டும். ஆனால் எனது தவறின் மூலமே வெற்றியை நோக்கி செல்ல முடியவில்லை. கிறிஸ் லின் சிறப்பாக ஆடினார். இந்த தொடரில் இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டனர்.