செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (11:27 IST)

சுயசரிதை புத்தகத்தை தோனிக்கு பரிசளித்த ரெய்னா!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தன்னுடைய சுயசரிதைப் புத்தகத்தை பிலீவ் என்ற பெயரில் எழுதியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா இப்போது தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை எழுதி வருகிறார். அவ்வப்போது அதில் இருந்து சில பகுதிகளை வெளியிட்டு வருகிறார். அந்த புத்தகத்துக்கு Believe என்று பெயர் வைத்துள்ளார். இந்த புத்தகத்தை ரெய்னாவுடன் இணைந்து பரத் சுந்தரேசன் என்பவர் எழுதியுள்ளார்.

இப்போது இந்த புத்தகத்தை ப்ரமோட் செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் ரெய்னா, பிரபலங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்து வருகிறார். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தன்னுடைய நெருங்கிய நண்பருமான தோனிக்கு கொடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.