200 ரன்கள் டார்கெட் கொடுத்த ராஜஸ்தான்.. 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் டெல்லி..!
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியில் இன்றைய முதல் போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியின் ஜாஸ் பட்லர் 79 ரன்களும் ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்துள்ளனர். ஹெட்மயர் அதிரடியாக 39 ரன்கள் எடுத்தார் அதில் நான்கு சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 200 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது டெல்லி பேட்டிங் செய்து வரும் நிலையில் பிரத்வியூ ஷா மற்றும் மணிஷ் பாண்டே ஆகிய இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகியுள்ளனர். சற்று முன் வரை அந்த அணி ஆறு ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை இழந்து 39 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
டெல்லி இதுவரை ஒரு போட்டியில் கூட ஜெயிக்காத நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Mahendran