வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஏப்ரல் 2023 (16:05 IST)

டாஸ் வென்ற டெல்லி.. அதிரடி பேட்டிங் செய்யும் ராஜஸ்தான்.. ஸ்கோர் விபரங்கள்..!

ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 11வது போட்டி டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இன்றைய போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் ராஜஸ்தான் ராயல் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக ஜெய்ஸ்வால் 21 வந்துகளில் 41 அடித்து உள்ளார் என்பதும் அதில் ஒன்பது பவுண்டரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
புள்ளி பட்டியலை பொருத்தவரை ராஜஸ்தான் அணி தற்போது இரண்டு புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி புள்ளி பட்டியலில் இன்னும் கணக்கை தொடங்காமல் எட்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று மாலை சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran