புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (09:46 IST)

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை செய்த டெல்லி அணி: பரபரப்பு தகவல்

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை செய்த டெல்லி அணி
ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணியின் புதிய சாதனை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஐபிஎல் போட்டியில் 16வது போட்டி நேற்று கல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 229 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 210 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 
 
இந்த நிலையில் இந்த போட்டியில் ஒரு புதிய சாதனையை டெல்லி அணியை நிகழ்த்தியுள்ளது. ஐபிஎல் போட்டியில் இதுவரை கொல்கத்தாவுக்கு எதிராக அதிக ரன்களை எடுத்தது டெல்லி அணி தான் என்ற சாதனை நேற்று செய்யப்பட்டுள்ளது 
 
இதற்கு முன்னர் இதே டெல்லி அணி இதே கொல்கத்தா அணிக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு விளையாடியபோது 219 ரன்கள் அடித்ததே ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிக ரன்கள் என்ற சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது அதே சாதனையை கொல்கத்தாவுக்கு எதிராக அதே டெல்லி அணி 228 ரன்கள் எடுத்து முறியடித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணி தனது சாதனையை தானே முறியடித்ததற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்