செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By Sinoj
Last Updated : சனி, 3 அக்டோபர் 2020 (23:55 IST)

ஐபிஎல்-2020; டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி !

இன்று மாலை 7;30 மணி நடைபெறும் மற்றோரு ஆட்டத்தில் ஸ்ரேயா அய்யர் தலைமையிலான டெல்லி அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான  கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு தேர்வு செய்து ஆடிவருகிறது.

டெல்லி அணியினர் அட்டகாசமான பேட்டிங் செய்தனர். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 229 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர்.

கொல்கத்தா அணிக்கு 229 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி.
இந்த அதிகப்பட்ச ஸ்கோரை கொல்கத்தா சேசிங் செய்யுமா என்பதைப் எல்லோரும் எதிர்ப்பார்த்தனர்.

இந்நிலையில், இறுதிவரை போராடிய கொல்கத்தா வீரர்கள் தங்களால் முடிந்தமட்டும் போராடினர்.

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் மட்டுமே எடுத்தது.
எனவே டெல்லி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.