செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 3 அக்டோபர் 2020 (15:21 IST)

ஆரம்பமே அடை மழைதான்; பேட்டிங் எடுக்கும் ராஜஸ்தான்! – ஈடுகொடுக்குமா பெங்களூர்!

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் மோத உள்ளது.

இன்று நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.

தற்போதைய நிலவரப்படி இரு அணிகளும் இதுவரை மூன்று போட்டிகள் விளையாடு ஒரு போட்டியில் தோல்வியும் மற்ற இரு போட்டிகளில் வெற்றியும் அடைந்துள்ளன. புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் ராஜஸ்தானும், 6வது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸும் உள்ளது. எனவே இந்த போட்டியில் பெரும் வெற்றி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக உள்ளது.

இந்நிலையில் தற்போது டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.