செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 11 ஏப்ரல் 2018 (22:30 IST)

டெல்லி - ராஜஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு

ஐபிஎல் போட்டியின் 6வது ஆட்டமான டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது.
 
ஜெய்ப்பூரில் இன்று தொடங்கிய டெல்லி-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்று டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டது.
 
இதனால் போட்டி நிறுத்தப்பட்டு வீரர்கள் வெளியேறினர். மழை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால் போட்டியை தொடரலாமா? என்பது குறித்து இரவு 11 மணிக்கு முடிவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.