125 ரன்களில் சுருண்ட RR: எளிய இலக்கை நோக்கி SRH...

Last Modified திங்கள், 9 ஏப்ரல் 2018 (22:02 IST)
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. 
 
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பவுலிங் தேர்வு செய்தார். துவக்கம் முதல் நிதானமாக ஆடி வந்த ராஜஸ்தான் வீரர்கள், 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தனர். 
 
ராஜஸ்தான் அணி கேப்டன் ரகானே (13), டார்ஷி ஷார்ட் (4) ஏமாற்றினர். சஞ்சு சாம்சன் (49) அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 
 
அதன் பின்னர் வந்த ராகுல் திருப்பதி (17), ஸ்ரேயாஸ் கோயல் (18) தவிர, பின் வரிசையில் வந்த வீரர்கள் யாரும் ஒற்றை இலக்கை தாண்டவில்லை. 
 
இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது. 126 ரன்கல் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி விளையாடி துவங்கியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :