வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (13:27 IST)

எஞ்சின் இல்லாமல் 10 கிமீ ஓடிய எக்ஸ்பிரஸ் ரயில்: வைரல் வீடியோ!

ஒசிசாவில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று எஞ்சின் இல்லாமல் 10 கிமீ தூரம் வரை சென்றுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. டிட்லாகார் என்ற ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 
ரிவர்ஸ் எடுப்பதற்காக ரயிலில் இருந்து எஞ்சினை பிரித்துள்ளனர். ஆனால் ரயில் வந்த வேகத்தில் பெட்டிகள் மட்டும் பிரிந்து வேகமாக ஓட ஆரம்பித்துள்ளது. 
 
இந்த ரயில் பத்து கிலோ மீட்டருக்கு இப்படியே வேகமாக ஓடி இருக்கிறது. காலை பத்து மணிக்கு துவங்கிய ரயில் 1 மணி வரை நிற்காமல் சென்றுள்ளது. 
 
இந்த ரயில் தானாக வேகம் குறையும் வரை காத்திருந்துள்ளனர். இதற்காக அந்த ரயில் வரும் பாதையை சரி செய்து மற்ற ரயில்களை மாற்றி விட்டு உள்ளனர். 
 
இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெட்டிகளில் இருக்கும் தனிப்பட்ட பிரேக்குகளை பயன்படுத்தாததால் இப்படி நடந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.