1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. DD sets target 167 for punjab

பஞ்சாப் அணிக்கு 167 ரன்கள் இலக்கு

பஞ்சாப்
டெல்லி - பஞ்சாப் அணிகள் இடையே நடைபெறும் போட்டியில் முதல் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்தது.

 
ஐபிஎல்2018 தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி - பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி டெல்லி அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.
 
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 166 ரன்கள் குவித்தது. ரிஷப் பந்த் மற்றும் கிரிஷ் மோரீஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். பஞ்சாப் அணி சார்பில் மோகித் சர்மா மற்றும் முஜ்பீர் ரஹ்மான் ஆகியோர் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
 
இதையடுத்து பஞ்சாப் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.
அடுத்த கட்டுரையில்
கேளராவுக்கு மாற்றப்படும் சென்னை ஐபிஎல் போட்டி?