யுவராஜ் சிங்கிற்கு ஆண் குழந்தை: ரசிகர்கள் வாழ்த்து
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் முக்கிய வீரர்களில் ஒருவர் யுவராஜ் சிங் என்பது தெரிந்ததே. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஹசீல் கீச் என்பவரை திருமணம் செய்து கொண்டார்
இந்த திருமணத்திற்கு சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் யுவராஜ் சிங் மனைவி சமீபத்தில் கர்ப்பமாக இருந்த நிலையில் இன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது
இதனை யுவராஜ் சிங் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது