மீண்டும் சிஎஸ்கே-குஜராத் அணிகள் மோத வாய்ப்பு உள்ளதா? வல்லுனர்கள் கணிப்பு..!
நேற்றைய ஐபிஎல் போட்டியின் குவாலிஃபையர் ஒன்று போட்டியில் குஜராத் அணியை சென்னை அணி வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் இறுதி போட்டியில் மீண்டும் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோத வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்
குவாலிஃபையர் 1 போட்டி முடிவடைந்த நிலையில் இன்று மும்பை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணி வரும் 26ஆம் தேதி குவாலிபயர் 2 போட்டியில் மோதும்
குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றால் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி, இறுதிப்போட்டியாக நடைபெறும் என வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
வல்லுனர்களின் இந்த கணிப்பு உண்மையா என்பதை இன்று மற்றும் மே 26 ஆகிய இரண்டு நாட்கள் நடக்கும் போட்டியின் முடிவில் இருந்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. வல்லுநர்களின் கணிப்பின்படி சென்னை மற்றும் குஜராத் அணி இறுதி போட்டியில் மோதினால் கண்டிப்பாக தோனி கோப்பையை பெற்று தருவார் என்றும் இந்த தொடரில் வீழ்த்த முடியாத அணி என்று வலம் வந்த குஜராத் அணியை வீழ்த்தி எலிமினேட்டர் சுற்றுக்கு தள்ளியவர் தோனி என்றும் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்
Edited by Siva